Monday, June 6, 2011

மீண்டும் ஒரு மழைக்காலம்

பல நாட்களுக்கு பிறகு ...
ஜன்னலின் ஓரத்தில் நானும் 
ஜன்னலுக்கு வெளிய அவளும்
ஒருவரை ஒருவர் தொடாமல் காதலிக்கிறோம்
சுடிதார் துப்பட்டா முகத்தில் ஒரசி செல்வதுப்போல் 
மழையின் சாரல் காற்று முகத்தில்
வானம் பார்த்தே காத்துகிடந்த
விவசாயியின் கண்களை போல் 
உன் வருகைக்காகவே காத்திருந்தேன் 
வானம் பொய்க்கவில்லை 
பெண்ணே நீ மட்டும் பொய்த்தது என்ன .?

Friday, May 27, 2011

இங்கு
தொப்புள் கொடி 
அறுப்பதற்கு முன்பே
பெயர் வைக்கப்படுகிறது 
தேவர், நாயக்கர், வன்னியர், ஐயர் .........................!

Monday, May 23, 2011

சிக்கல்

நீ '"டா"என்கிறப்போதெல்லாம்,
அது வயதொத்தவள்  அழைக்கிறாள்,
தோழியின் தோழமை ,
காதலியின் காதல் ,
நண்பனின் தங்கையின் குறும்பு ,
இப்படியே தோன்றுகிறது 
நான் எப்போதாவது "டி" என்கிறபோது 
அது எப்பொதுமே உனக்கு 
ஆணாதிக்கத்தின் அடையாளமாகவே தெரிகிறது 
இதுவும் இந்த சமுகத்தின் சிக்கல் தானோ ..!

Sunday, February 20, 2011

முடிவில்லா பயணம்

ஒரு இயந்திர வண்டியில் தொலைந்து போனது என் இதயம் 
இறங்க வேண்டிய இடம் வந்தும்
இருக்கையில் அவள் இருக்கையில் 
அவள் கைகளில் என் கை இருக்கையில் 
தொடர்ந்தது எங்கள் பயணம் 
உதடுகள் உழைக்கமாலே உணர்ந்து கொண்டது இதயம் 
முடிவில்லா அந்த பயணம் 
இன்றும் தொடர்கிறது நினைவுகளில் 
அவள் விரலின் வருடல்கள் 
இன்றும் நெஞ்சினில் வலியாக
வலியாற்ற அவள் வருவாள் என்ற நம்பிக்கையில் 
மீண்டும் முடிவில்லா ஒரு பயணத்தை எதிர்நோக்கி 
தொடர்கிறது என் பயணம் .........!


முடிவில்லா பயணங்கள்

பயணங்கள் எப்போதும் இனிமையானது 
சில பயணங்கள் நெடுந்தூரமாக இருந்தாலும் 
சிலகாலமே சிறுமூளையில் தங்குகிறது 
சில பயணங்கள் என்னதான் சிறியதாக இருந்தாலும்
நெஞ்சம் அதனோடு பயணிக்கவே விரும்புகிறது 
இந்த பயணங்கள் முடிவதே இல்லை 
நெஞ்சோடு நினைவுகளில் தொடர்கிறது 
சிலவை வலிகளாக......